குறிஞ்சிப்படி வட்டம்,வடலூரில் அனுமதியின்றி பஸ்சை மறிக்க முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் தமிழக முழுவதும் அரசு பஸ்களில் எழுதப்பட்டுள்ள, அரசு பேருந்து என்ற வாசகங்களுக்கு முன்பு, ‘தமிழ்நாடு’ என்ற ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் நடந்து வருகிறது

வடலூர் பஸ் நிலைய பகுதியி அனுமதியின்றி பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்ட அக்கட்சியினர் திரண்டனர். கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இன்பெண்டா சாவித்திரி உள்ளிட்ட, 8 பெண்கள் உட்பட 38பேரை போலீசார் கைது செய்தனர். அனைவர் மீதும் வழக்குப் பதிந்த போலீசார் பின்னர் விடுவித்தனர். முன்னதாக,போக்குவரத்து கழகங்களில் தமிழ்நாடு அரசு என்கிற பெயர் நீக்கத்தை கண்டித்து கண்டன, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *