கோவையில் 11-ம் ஆண்டு பிரம்மாண்ட விஸ்வாமித்திரர் குரு பூஜை – ஜனவரி 4-ம் தேதி கொடிசியா வளாகத்தில் நடைபெறுகிறது

கோவை கொடிசியா வளாகத்தில், வரும் ஜனவரி 4-ம் தேதி,11-ம் ஆண்டு விஸ்வாமித்திரர் குரு பூஜை விழா நடைபெறவுள்ளது இதனை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரம்மஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ராஜரிஷி விஸ்வாமித்திர ஆச்சாரியார் குருஜி கூறியதாவது 11-ம் ஆண்டு விஸ்வாமித்திரர் குரு பூஜை விழா, கோவையில் மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு விழா கடந்த ஆண்டுகளை விட சிறப்பாகவும், பிரமாண்டமாகவும் நடைபெறும் இந்த குரு பூஜை விழாவில்,விஸ்வாமித்திரருக்கு 108 கிலோ ருத்ர அபிஷேகம், 1008 வலம்புரி சங்கு அபிஷேகம் மற்றும் கலச தீர்த்த அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

விழாவில் பங்கேற்கும் அனைவரையும் “மகேசன்” என கருதி,
தலைவாழை இலையில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்,
பல்லாயிரம் பக்தர்கள் இதில் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஆன்மீக சான்றோர்கள் இந்த குரு பூஜை விழாவில் பங்கேற்க உள்ளதாகவும்,இந்த ஆண்டு நடைபெறும் விஸ்வாமித்திரர் குரு பூஜை விழா,கடந்த ஆண்டை விட மிகச் சிறப்பாக நடைபெறும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு, இந்த ஆன்மீக விழாவை சிறப்பிக்க வேண்டும் என விழா குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த குரு பூஜை விழாவிற்காக, கோடிசியா வளாகத்தில் சிறப்பு ஆன்மீக அலங்காரங்கள், யாகசாலை அமைப்புகள் மற்றும் பக்தர்களுக்கான ஒழுங்குமுறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக, தன்னார்வலர்கள், மருத்துவ குழு, குடிநீர் மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக விழா குழுவினர் தெரிவித்துள்ளனர்.

குரு பூஜை விழா காலை முதல் இரவு வரை நடைபெறவுள்ள நிலையில்,
பூஜைகள், மந்திர உச்சாடனங்கள், ஆன்மீக உரைகள் மற்றும் பிரார்த்தனைகள் இடம் பெற உள்ளன இந்த விழா, ஆன்மீக ஒற்றுமை, குரு பக்தி மற்றும் மனித நேயம் ஆகியவற்றை வலியுறுத்தும் விழாவாக அமையும் எனவும்,
பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ளலாம் எனவும் விழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *