கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள எம்ஜிஆர் தோட்டத் தொழிலாளர்கள் சங்க அலுவலகத்தில் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தோட்டத் தொழிலாளர் பிரிவு மாநில தலைவரும், எம்ஜிஆர் தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தலைவர் வால்பாறை வீ.அமீதுவிற்கு தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து சிறப்பு விழா ஏற்பாடு செய்திருந்தனர் முன்னதாக தொழிற்சங்க தலைவருக்கு தொழிற்சங்க கமிட்டிகள், நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் மலர்மாலை அணிவித்து சிறப்பு வரவேற்பு அளித்தனர்

அதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழிற்சங்க தலைவர் அமீது பேசும்போது தொழிலாளர்களுக்கு கிடைக்கவேண்டிய அரியர் தொகை விரைவில் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை தொழிற்சங்கத்தினர் எடுத்து வருவதாகவும் விரைவில் கிடைக்கும் என்றும் புதிய ஆண்டில் அனைவரும் தொழிற்சங்க அலுவலகத்திற்கு வந்து வாழ்த்து தெரிவித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறி அனைவருக்கும் கேக் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்

சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பாசறை மாவட்ட இணைச்செயலாளர் சலாவுதீன் அமீது, பேரவை மாவட்ட இணைச்செயலாளர் நரசப்பன், அவைத்தலைவர் சுடர் பாலு, செந்தில் அண்ணாதுரை, மாணவரணி நகரச்செயலாளர் லோகேஷ், வார்டு செயலாளர் பாலன், நகர வர்த்தக அணி இணைச்செயலாளர் ராஜா,யூசப், ஜான் பீட்டர், கமாலுதீன், கண்ணன், கவர்க்கல் ஜீவா, கருணாகரன், சீனிராஜ் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும் திரளாகக் கலந்து கொண்ட நிலையில் அனைவருக்கும் மதிய உணவாக அசைவ பிரியாணி வழங்கப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *