சமீப மாதங்களில் பல்வேறு மாவட்டங்களில், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களில் இருந்து பலரும் தன் விருப்பத்தோடு மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக தற்போது ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் (IMMK) மாநில செயலாளர் கோவை R.M. ரஃபி அவர்கள் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் முன்னிலையில் தன்னை மஜக-வில் இணைத்துக் கொண்டார்.
இவர் முன்பு 7 மாவட்டங்கள் அடங்கிய கொங்கு மண்டல தமுமுக-வின் செயலாளராகவும் சிறப்பாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருடன் கோவை மத்திய மாவட்ட பொருளாளர் வசீர் அகமது அவர்களும் தன்னை மஜக-வில் தலைவர் முன்னிலையில் இணைத்துக் கொண்டார் விரைவில் கோவையில் பெருந்திரளானோர் கட்சியில் இணையும் இணைப்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படும் என்றும், அவர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர் இயக்கப்பணிகளில் நீண்ட காலம் பணியாற்றிய நிலையில், தெளிவான கொள்கை கொண்ட ஒரு அரசியல் களத்தில பணியாற்ற வேண்டும் என்று இம்முடிவை எடுத்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் அரசியல் ஈர்ப்பின் காரணமாக மேலும் பல மாவட்டங்களில் இருந்தும் பலர் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் கடந்த ஒரு வாரமாக இவர்கள் இணைப் பொதுச் செயலாளர் கேப்டன் செய்யது முகம்மது பாரூக் அவர்களுடன் உரையாடி வந்தது குறிப்பிடத்தக்கது.
திருச்சியில் இன்று மதியம் நடைபெற்ற இந்நிகழ்வில், மாநில செயலாளர். அகமது கபீர், கோவை மாநகர மாவட்ட செயலாளர் ஹெச்.எம். முகமது ஹனீஃப் ஆகியோரும் உடன் இருந்தனர்.