திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் எளிமையாக ஆங்கிலம் கற்றுக்கொள்ளவதற்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கையேடு தயாரித்து வழங்கியவலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பயிற்சி ஆசிரியராக பணிபுரிபவர் மாருதிமாலன். இவர் கும்பகோணம் கே.எஸ்.கே கல்வியியல் கல்லூரியில் பி.எட்., பயின்று வருகிறார். இந்நிலையில் மாணவர்கள் எளிமையாக ஆங்கிலம் கற்றுக்கொள்ளவதற்கு உதவியாக பயிற்சி கையேடு ஒன்றை தயாரித்து வழங்கியுள்ளார்.
வினைச்சொற்கள், எளிமையாக வாக்கியங்கள் ஆகியவை இந்தக் கையேட்டில் உரிய தமிழ் விளக்கங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன. புது முயற்சியாக நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கையேட்டில் கியூ.ஆர். கோடு தனியாக இடம் பெற்றுள்ளது. இதை ஸ்கேன் செய்து ஆங்கில பயிற்சிக்கான வீடியோவையும் பார்க்க முடியும். இது குறித்து பயிற்சி ஆசிரியர் மாருதிமாலன் கூறியதாவது:- தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்தி வரும் திறன் இயக்கத்திற்கு இந்தக் கையேடு கூடுதலாக உதவியாக இருக்கும். க்யூ.ஆர். கோடு ஸ்கேன் செய்து பார்ப்பது மாணவர்களுக்கு பிடிக்கும். எனவே இந்த கையேட்டில் க்யூ.ஆர். கோடு சேர்க்கப்பட்டுள்ளது. இதுபோல மேலும் சில கையேடுகள் தயாரித்து வழங்கப்படும் என்றார். இந்த கையேட்டினை தயாரித்து வழங்கிய பயிற்சி ஆசிரியர் மாருதிமாலனை பள்ளியின் தலைமை ஆசிரியர் மு. நாவளவன், வழிகாட்டி ஆசிரியை புவனேஸ்வரி ஆகியோர் பாராட்டினார்கள்.