கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80-வது வார்டுக்கு உட்பட்ட செட்டி வீதி பகுதியில், கடந்த சில ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில்,
புதிய பாதாள சாக்கடை மற்றும் கான்கிரீட் தளம் அமைப்பதற்கான பணிகளை பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் அவர்கள் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நாடு போற்றும் திராவிட மாடல் நல்லாட்சியில், மக்கள் நலப்பணிகள் மாநிலம் முழுவதும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக,
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80-வது வார்டு பொதுமக்களின் மிக முக்கியத் தேவையான கான்கிரீட் தளம், பாதாள சாக்கடை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
மக்களின் இந்த நீண்ட கால இன்னலைப் போக்கும் வகையில், 80-வது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு. பெ.மாரிசெல்வன் அவர்கள் மேற்கொண்ட தீவிர முயற்சியின் பயனாக, இன்று பொம்மி செட்டி பகுதியில் புதிய பாதாள சாக்கடை மற்றும் கெம்பட்டி பகுதியில் பாளையன்தோட்டம் ஹவுசிங் யூனிட் பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டது.
மேலும்
பொதுமக்கள் மகிழ்ச்சி:
இந்த பணி துவக்க நிகழ்ச்சியில் செட்டி வீதி மற்றும் பொம்மி செட்டி , கெம்பட்டி பகுதியைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பொது மக்கள் மகிழ்ச்சி:
தங்களின் சில ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றித் தந்ததற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், இதற்காக அயராது பாடுபட்ட மாமன்ற உறுப்பினர் திரு. பெ.மாரிசெல்வன் அவர்களுக்கும் பொதுமக்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில்
உதவி பொறியாளர் நாகேந்திரன் சுகாதார ஆய்வாளர் தனபால்,
மாநில இணை செயலாளர் பா.நாச்சிமுத்து, கெம்பட்டி பகுதி செயலாளர் என்.ஜெ.முருகேசன். வார்டு செயலாளர் நா.தங்கவேலன். மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் உடன் இருந்தனர்.