சென்னை திருவொற்றியூர் தபால் நிலையம் அருகே வடசென்னை அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் மத்திய அரசின் புதிய சட்டத்தை திரும்பப் பெறு என வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி மாற்றுத்திறனாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் புதிய சட்ட நகலை கிழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
வடசென்னை மாவட்டம் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை நல சங்கம் சார்பில் பார்வையற்றோர் உடல் ஊனமுற்றோர் மூன்று சக்கர வாகனம் வீல் சேரில் அமர்ந்தவாறு சுமார் 50-க்கும் மேற்பட்ட திறனாளிகள் புதிய சட்ட நகலை கிழித்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இதில் புதிய சட்ட திருத்தத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்காதே
மத்திய அரசின் ஊரக வேலைவாய்ப்பு திட்டம் புதிய சட்டத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்தர வேலை கிடைக்காது எனவும் இந்த புதிய சட்ட திருத்தம் விளைவாக மாற்றுத்திறனாளிகள் மிகவும் பாதிப்படைவார்கள் எனவே பாரத பிரதமர் புதிய சட்டத்தை ரத்து செய்து முன்பு இருந்தது போலவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தை அமுல் படுத்திட வேண்டும் 100 நாள் திட்டமாக இருந்ததை 200 நாள் திட்டமாக மாற்றி மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் மகாத்மா காந்தி பெயரை நீக்க கூடாது எண்ணற்ற மாற்றுத்திறனாளிகள் பயன் பெற்று வரும் இந்த திட்டத்தை உடனடியாக மத்திய அரசு அமல்படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சட்ட நகலை கிழித்து போராட்டத்தில் அனைத்து மாற்று திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
பேட்டி:நடராஜன் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க பொருளாளர்