பெரம்பலூர்.ஜன.06. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஒன்றிய அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வுசெய்ய நியமிக்க்பட்டுள்ள பொறுப்பு அலுவலரும் (Central Prabhari Officer) / ஒன்றிய அரசின் சுற்றுலாத் துறை அரசு துணைச் செயலாளருமான லலிதாம்பிகை, தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி முன்னிலையில் முன்னேற்றத்தை நாடும் வட்டாரங்கள் திட்டத்தின் கீழ், மாவட்ட மற்றும் வட்டார நிலை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முன்னேற்றத்தை நாடும் வட்டாரங்கள் திட்டத்தின் கீழ், ஆலத்துார் வட்டாரத்தில் 12 துறைகளின் கீழ் செயல்படும் 39 திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வுசெய்யப்பட்டது.
மேலும், கருவுற்ற தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் குறைவான எடையுடன் பிறந்த குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் சிகிசைக்கள், அரசு திட்டங்கள் குறித்தும், ஊட்டச்சத்து குறைபாட்டை களைவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஒன்றிய அரசின் துணைச் செயலாளர் அவர்கள் விரிவாக ஆய்வுசெய்தார்.
பள்ளி மாணவர்களிடம் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், PM KISSAN திட்டங்கள் தொடர்பான பதிவுகள் மேற்கொள்ளவும், பாரதப் பிரதமர் வீடுகட்டும் திட்டம், ஜல் ஜீவன் மிஷன் உள்ளிட்ட ஒன்றிய அரசின் திட்டப்பணிகள் குறித்தும் விரிவாக ஆய்வுசெய்தார்.
வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக ஒதுக்கப்படும் நிதி முறையாக, முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்றும், புதிய திட்டப் பணிகளை செயல்படுத்த நிதி தேவைப்படின் ஒன்றிய அரசிடமிருந்து பெற்றுத் தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்த துணை செயலாளர் அவர்கள், தற்போது செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டப்பணிகளை உரிய காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து ஒன்றிய அரசின் சுற்றுலாத் துறை அரசு துணைச் செயலாளர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.கண்ணன், திட்ட இயக்குநர்கள் தேவநாதன் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை), கோபாலகிருஷ்ணன் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) மற்றும் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) (பெர) சொர்ணராஜ், வருவாய் கோட்டாட்சியர் அனிதா, மாவட்ட திட்ட அலுவலர் ராமச்சந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.