திருப்பூர் மாவட்டம்தாராபுரம் நல்விக்கவு ண்டம்பாம் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகள் கோபிகா (வயது 18). தாராபுரத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். தினமும் பள்ளிக்கு செல்ல நல்லிகவுண்டம் பாளையத்தில் இருந்து தொப்பம்பட்டிக்கு மொபட்டில் செல்வதுடன் அங்கிருந்து பஸ் ஏறி தாராபுரத்தில்பள்ளிக்கு சென்று வந்தார்.
அதேப்போல் இன்று காலை தொப்பம்பட்டிக்கு மொபட்டில் வந்த கோபிகா அங்குள்ள வாகன காப்பகத்தில் தனது மொபட்டை நிறுத்தி விட்டு, சாலையை கடந்து பஸ் நிறுத்தத்திற்கு செல்ல முயன்றார்.
அப்போது அந்த வழியாக காங்கயம் பகுதியை சேர்ந்த முருக பக்தர்கள் வந்த வேன் கோபிகா மீது மோதி கவிழ்ந்தது.இந்த விபத்தில் கோபிகள் சம்பய இடத்திலேயே உயிரிழந்தார். வேனில் பயணம்
செய்த காங்கேயம் மற்றும் சிவன்மலை பகுதியை சேர்ந்த முருக பக்தர்கள் செல்வ தரணிதரன் (28), ஜவகர் (49). பழனிச்சாமி (31),அடைந்தனர் செந்தில் சுருமார் (43), தாமரை க்கண்ணன் (38), தேவசேனாபதி சாயம் அருண்குமார் (36) மற்றும் டிரைவர் குமாரசாமி (36) உள்ளிட்ட 16 பேர் காயம் அடைந்தனர் அவர்களை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். இதில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து குறித்து தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முருக பக்தர்கள் அறுபடை முருகன் கோவில்களுக்கு ஒரு சென்று விட்டு இன்று காலை ஊர் திரும்பிய போது விபத்தில் சிக்கி உள்ளனர். மேலும் மா உயிரிழந்தது அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.