சாலையோரம் நிறுத்தி இருக்கும் லாரிகளில் இருந்து பேட்டரிகளை திருடி கைவரிசை காட்டிய நபர் கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
திருவண்ணாமலையை சேர்ந்தவர் பிரகாஷ் 45.லாரி டிரைவர். இவர் நேற்று மாலை மணலி சாலையில் லாரியை நிறுத்தி விட்டு உணவு சாப்பிட சென்றார். பின்னர் திரும்பி வந்த போது நபர் ஒருவர் அவரது லாரியில் இருந்து பேட்டரியை திருடியதை பார்த்து கையும் களவுமாக பிடித்து மணலி போலீசாரிடம் ஒப்படைத்தார்,

பிடிபட்டவரிடம் போலீசார் விசாரித்ததில், திருவண்ணாமலை சேர்ந்தவர் முத்துச் செல்வன் 40. இவர் ஏற்கனவே லாரி டிரைவராக இருந்தவர். சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் லாரிகளிலிருந்து பேட்டரிகளை திருடி காயலாங் கடையில் விற்றது பணத்தைப் பெற்றுக் கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.

இதை அடுத்து திருட்டு பேட்டரிகளை வாங்கிய ஆண்டார் குப்பம் சந்திப்பில் காயலாங்கடை வைத்திருக்கும் சரவண முருகன் 55 என்பவரை கைது செய்து இவர்களிடமிருந்து 11 லாரி பேட்டரிகளை பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக மணலி போலீசார் வழக்கு பதிவு செய்து, முத்துசெல்வன் சரவணமுருகன் ஆகிய இருவரையும் திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *