தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிந்து திங்கட்கிழமை பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு தேவையான பேக் நோட்டு புத்தகம் பேனா பென்சில் உள்ளிட்ட பொருட்கள் பல்வேறு சமூக ஆர்வலர்கள் மூலம் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி கணேசன் நகரில் உள்ள சின்ன மணி பள்ளியில் படிக்கும் 143 பள்ளி மாணவ மாணவிகளுக்கு அதிமுக வர்த்தக அணி செயலாளரும். அதிமுக முன்னாள் அமைச்சருமான செல்ல பாண்டியன் 143 பள்ளி மாணவ மாணவிகளுக்கு தன் சொந்த செலவில் ஸ்கூல் பேக் நோட்டு பேனா பென்சில் உள்ளிட்ட பொருட்களை பள்ளி மாணவ மாணவிகளுக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லபாண்டியன் வழங்கினார்.

இது குழந்தைகள் மத்தியில் மிக்க மகிழ்ச்சியாகவே இருந்தது பள்ளி துவங்கிய இரண்டாவது நாளிலேயே புது ஸ்கூல் பேக் நோட்டு. பேனா பென்சில் உள்ளிட்ட பொருட்களை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் அதிமுக தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் சந்தானம். முன்னாள் மீனவர் கூட்டுறவு சொசைட்டி தலைவர் அகஸ்டின். சங்கர் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *