தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் பழமை வாய்ந்த பரமசிவன் திருக்கோவிலுக்கு செல்லும் ரோடு குண்டும் குழியுமாக பல்லாங்குழி சாலையாக இருந்தது இதனை சீரமைத்து புதிய தார்சாலை அமைத்து தர வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பிலும் கோவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர்

இதையடுத்து நகராட்சி ஆணையாளர் சுதா பொறியாளர் வி குணசேகரன் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் ஆகியோர் உத்தரவின்படி நகராட்சியின் மூலம் தரமான தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இந்த பணிகளை தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி ஆய்வு செய்தார்

மேலும் அங்கு பணி செய்யும் ஒப்பந்ததாதர்களிடம் போடப்படும் புதிய தார் சாலை தரமானதாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார் இந்த ஆய்வில் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் நகராட்சி ஆணையாளர் சுதா பொறியாளர் வி குணசேகரன் மேலாளர் ஜலாலுதீன் திமுக நகரச் செயலாளர் ஆர் புருஷோத்தமன் சுகாதார அலுவலர் மணிகண்டன் கட்டிட ஆய்வாளர் சுகதேவ் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *