ராஜபாளையத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் திமுக பொதுக்கூட்டம். அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்பு!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மேற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி அளித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ஜவகர் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் தங்கப்பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தமிழ்நாடு வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீ குமாருக்கு பாராட்டி பொன்னாடை அணிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரிய துணைச் செயலாளர் ராசா அருள்மொழி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார், நகர திமுக செயலாளர்கள் ராமமூர்த்தி (தெற்கு) மணிகண்ட ராஜா (வடக்கு), ராஜபாளையம் நகர் மன்ற தலைவர் பவித்ரா ஷ்யாம், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சிங்கராஜ், ராஜபாளையம் மொத்த கூட்டுறவு விற்பனை பண்டகசாலை தலைவர் ந.பாஸ்கரன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் செ. கனகராஜ் உள்பட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டு பேசினார்கள்.