ஓ.என்.ஜி.சி சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பரிந்துரையில் சுமார் 13 இலட்சம் மதிப்பீட்டில் திருவாரூர் நகராட்சி தென்றல் நகர், பாலாஜி நகர், சாப்பாவூர், கடாரன்கொண்டான் கலைஞர் தெரு,வன்மீகபுரம், மரண பாலம், சின்னமேட்டுபாளையம் உட்பட்ட ஏழு இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகள்,30 வது வார்டு கட்டபொம்மன் நகரில் சுமார் 3.6 இலட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு மற்றும் மினி டேங்க் வசதி மக்கள் பயன்பாட்டிற்காக ஓ.என்.ஜி.சி மனிதவள தலைமை அதிகாரி கிரிராஜ் திமன் தலைமையில் நடைபெற்ற விழாவில் திருவாரூர் நகராட்சி தலைவர் புவணப்ரியா செந்தில் தொடங்கி வைத்தார்.

திருவாரூர் நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா மற்றும் நியமனக்குழ உறுப்பினர் வாரை பிரகாஷ் முன்னிலை வகித்தனர். ஓ.என்.ஜி.சி. சமூக பொறுப்புணர்வு திட்ட அதிகாரி தங்கமணி வரவேற்றார். இந்நிகழ்வில் நகராட்சி பொறியாளர் திருமலை வாசன், வார்டு கவுன்சிலர்கள் புருஷோத்தமன், கருணாநிதி, வரதராஜன்,ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் சிரிகுமார் நாயர் ரவி, ஆறுமுகம், முருகானந்தம், லயன் சங்கத்தினர், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இரு திட்டங்களையும் ஓ.என்.ஜி.சி நிதியில் நாகையை சேர்ந்த யோகிதா மற்றும் சுவீட் தொண்டு நிறுவனத்தினர் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *