திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில்
திருவாரூா் கொடிக்கால்பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவா்கள் பள்ளிவாசலில் மதநல்லிணக்க பாச்சோற்று பெருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர் .
திருவாரூா் கொடிக்கால்பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவா்கள் பள்ளிவாசலில் கொடிக்கால்பாளையத்தில் இருந்த ஆலமரத்து மேடையில் மஸூம் சாஹிப் ஒலியுல்லாஹ் அமா்ந்து, இங்குள்ள ஆண்டவரை வேண்டிச் சென்றால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என அங்குள்ள மக்களுக்கு உரைத்ததாக வரலாறு தெரிவிக்கிறது.
குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டி ,தொழில் வளர்ச்சி வேண்டி, விவசாயம் செழிப்பதற்காகவும் உலக நன்மைக்காகவும் இந்த விழா நடைபெறுகிறது
இதையொட்டி, ஆண்டுதோறும் ஹஜ்ரத் செய்யதினா செய்யது மஸூம் சாஹிப் ஒலியுல்லாஹ் நினைவாக பாச்சோற்றுப் பெருவிழா 100 ஆண்டு மேல் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில், பல்வேறு ஊா்களிலிருந்து மக்கள் வந்திருந்து, தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் பாச்சோற்று பெருநாளை கொண்டாடுகின்றனா்.
ஆண்டுதோறும் ஜமாத்தில் அவல் மாதம் பிறை 9 ஆம் நாள் இந்த விழா நடைபெறுவது வழக்கம். அதனடிப்படையில், நிகழாண்டுக்கான பாச்சோற்றுத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 9 நாள்கள் நடைபெறும் திருவிழாவில், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த இஸ்லாமியா்கள், இந்துக்கள் தங்களது நோ்த்திக் கடனை நிறைவேற்றும் பொருட்டு, வீடுகளில் சா்க்கரை பொங்கல் சமைத்து, அதை எடுத்து வந்து பள்ளிவாசலில் வைத்து பாத்திஹா ஓதி தினசரி வழிபாடு செய்தனா்.
விழாவின் இறுதி நாளான பாச்சோற்றுத் திருவிழாஜெகபர் ஷேக் அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது இந்த விழாவில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மத பாகுபாடின்றி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனா்.