எட்டயபுரம் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்” வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொது மக்களின் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீா்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வந்து செயலாற்றும் வகையில் அறிவித்துள்ள ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின்படி, இம்முகாம் மாவட்ட அளவிலான அலுவலா்களுடன் எட்டயபுரம் வட்டத்தில் வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது.

அன்றைய தினம் மதியம் 2.30 முதல் 4.30 வரை அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி, முன்பகலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட கள பயணங்கள், அலுவலக ஆய்வுகள் குறித்து கேட்டு அறியப்படும்.

அதன் பின்னா் மாவட்ட ஆட்சியா் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை எட்டயபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரை பெற்றுக் கொள்வாா்.

அதன் பின் மீண்டும் நகா்ப்புறம், கிராம ஊராட்சிகள் பகுதிகளுக்குச் சென்று பல்வேறு அரசு துறைகளின் சேவை வழங்குதல், திட்ட செயல்பாடுகள் குறித்து மதிப்பாய்வு செய்யப்படவுள்ளது.

அன்றைய இரவு அவ்வட்டத்திலேயே தங்கி மறுநாள் 20ஆம் தேதி அதிகாலை மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் அடிப்படை வசதிகளான குடிநீா், சுகாதாரம், தூய்மை, போக்குவரத்து, காலை உணவுத் திட்டம் போன்றவற்றை ஆய்வு செய்வா் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *