பொங்கல்திருநாளை சிறப்பாகக் கொண்டாட 2 கோடியே 23 லட்சத்து 91,710 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.3,000 ரொக்க பணத்துடன் சேர்த்து வழங்கும் பணியை சென்னைஆலந்தூரில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
மற்ற மாவட்டங்களில் ரொக்கப் பணம் ரூ.3,000, பொங்கல் பொருட்களை குடும்ப அட்டை தாரர்களுக்கு மதுரை ஆரப்பாளையம் பகுதியில் மாநகராட்சி கவுன்சிலர் ஜெயராம்,வழங்கினார்.
ரேஷன் கடைகளில் நெரிசலைக் கட்டுப் படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ரூ.3 ஆயிரம் ரொக்கத் தொகையை வழங்கும் போது, பயனாளிகள் முன்னிலையில் தெளிவாக எண்ணி வழங்கப்பட்டது. பொங்கல் பண்டிகை வரை ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொங்கல் தொகுப்பு விநியோகத்திற்கான டோக்கன் வழங்கும் பணி முடிவடைந்துள்ள நிலையில், டோக்கன் பெறாதவர்கள் தங்களது ரேஷன் கடை ஊழியரைத் தொடர்பு கொண்டு, அவர்கள் குறிப்பிடும் தேதியில் பொருட்களையும் ரொக்கத்தொகையையும் பெற்றுக் கொள்ளலாம். இது தவிர ரேஷன் கடைகள் விடுமுறை நாட்களிலும் செயல்பட உத்தரவிடப் பட்டுள்ளது.