“உங்க கனவ சொல்லுங்க” எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
பெரம்பலூர்.ஜன.09. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ”உங்க கனவ சொல்லுங்க” எனும் புதிய திட்டத்தை திருவள்ளுர் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளின , எம் எல் ஏ பிரபாகரன் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூட்ட அரங்கில் மகளிர் சுயஉதவிக்குழுக்களைச் சேர்ந்த தன்னார்வலர்களுடன் அமர்ந்து நேரலையில் பார்வையிட்டனர்.
“உங்க கனவ சொல்லுங்க” திட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள சுமார் 1.91 கோடி கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள குடும்பங்களை சந்தித்து, அவர்கள் பயன்பெற்ற திட்டங்கள் மற்றும் கனவுகளை 50,000 தன்னார்வலர்களை ஈடுபடுத்தி கண்டறிய எடுக்கப்படும் முன் மாதிரி முயற்சியாகும். இந்த களப்பணி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இப்பணிக்காக மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த சுமார் 50,000 தன்னார்வலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துகளை பதிவு செய்ய தமிழ்நாடு மின்-ஆளுமை முகமை (TNeGA) மூலம் தனியாக கைபேசி செயலி இதற்கென உருவாக்கப்பட்டுள்ளது.
தன்னார்வலர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு முறை செல்வர். முதல் முறை வீட்டிற்கு செல்லும் போது விண்ணப்ப படிவத்தினை குடும்பத் தலைவர் / உறுப்பினரிடம் வழங்குவர். அவ்விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசு திட்டங்களின் பெயர் பட்டியல் விவரங்களை அவர்களிடம் தெரிவித்து, படிவத்தினை பூர்த்தி செய்து தரும்படி கோருவர்.
தன்னார்வலர்கள், இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினை சரிபார்த்து கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்வர். கைபேசி செயலியில் பதிவேற்றியப் பின்னர் அக்குடும்பத்திற்கு தனித்துவமான அடையாள எண்ணுடன் கூடிய கனவு அட்டையினை வழங்குவர்.
இந்த அட்டை மூலம் www.uks.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கனவு / கோரிக்கையின் நிலை குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.
இன்றைய நிகழ்வில் மகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த தன்னாவர்வலர்களுக்கு உங்க கனவை சொல்லுங்க கனவை சொல்லுங்க திட்டத்தின் கீழ் பூர்த்தி செய்யப்படவேண்டிய விண்ணப்ப படிவங்கள் மற்றும் அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி, வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல், நகர்மன்றத்தலைவர் அம்பிகா , பாஸ்கர், திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலைய ஆலோசனைக்குழு உறுப்பினர் சிவசங்கர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.