கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு பகுதியில் செயல்பட்டு வரும் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் பாரம்பரிய முறையில் பொங்கல் விழா நடைபெற்றது. பள்ளிச் செயலர் முனைவர் கவிஞர் கவிதாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரம்பரிய முறையில், பசுமாடு, கன்று முன்னிலையில் மண்பானையில் பொங்கல் வைத்து பொங்கல் பொங்கியதும் மாணவர்கள் அனைவரும் பொங்கலோ பொங்கல் என்று குதூகலமாக சப்தமிட்டனர்.
பொங்கல் விழா நிகழ்ச்சியை முன்னிட்டு மாணவ மாணவியருக்கான கயிறு இழுத்தல் போட்டி, கபடி போட்டி போன்ற விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றது பாரம்பரியமான முறையில் நடைபெற்ற இந்த பொங்கல் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக உள்ளூர் விவசாயிகள் சி என் .ஆர் ராஜேந்திரன், ரங்கராஜ், பள்ளி முதல்வர் முனைவர் உமா மகேஸ்வரி, துணை முதல்வர் முனைவர் சக்திவேல் மற்றும் ஆசிரியர்கள்., மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்