பொள்ளாச்சிதி.மு.க. மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலரின் கணவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் ஆனைமலை தாலுகாவுக்கு உட்பட்ட ஆத்துப்பொள்ளாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் வளர்மதி. திமுகவைச் சேர்ந்த இவர் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலராக உள்ளார். இவரது கணவர் கார்த்திகேயன் திமுக மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
அதே பகுதியைச் சார்ந்த அதிமுக வைச் சேர்ந்த ஒற்றைக்கை பரமசிவம் என்பவர் கார்த்திகேயனுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சம்பவத்தன்று மாலை கார்த்திகேயன் வாக்கிங் செல்லும் போது, அங்கு வந்த பரமசிவம் தகாத வார்த்தைகளில் பேசி, தகராறில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் பாதிக்கப்பட்ட கார்த்திகேயன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில் ஆனைமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.