திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க.செல்வம் தலைமையில், பள்ளி தலைமையாசிரியர் மு.நாவளன் முன்னிலையில், பள்ளி வளாகத்தில் பொங்கலிட்டு பூஜைகள் நடைபெற்று அனைவருக்கும் பொங்கல் வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்வில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் புலவர் சிவ.செல்லையன் மற்றும் வளையமாபுரம் சரவணன், நாடிமுத்து, பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.