எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
ஆடி வெள்ளியை முன்னிட்டு சீர்காழி சட்டைநாதர் திருக்கோயிலில் திருவிளக்கு பூஜை திரளான பெண்கள் பங்கேற்று வழிபாடு :-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ சட்டை நாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருநிலை நாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வர ஸ்வாமி,சட்டை நாதர், தோனியப்பர், முத்து சட்டை நாதர் தனித்தனி சன்னதியில் அருள் பாலித்து வருகின்றனர்.
ஆடி பிரம்மோற்சவம் விழா கொடியேற்றத்துடன் நடைபெற்று வருகிறது. ஆடி வெள்ளியை முன்னிட்டு பிரம்மபுரீஸ்வரர் சன்னதியின் அருகில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திரளான பெண்கள் கலந்து கொண்டு உலக நன்மை வேண்டியும் குடும்பம் செழிக்கவும் சிறப்பு பிரார்த்தனைக் கொண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
மலர்கள் மற்றும் குங்குமம் கொண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இறுதியாக மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்பாளை வழிபாடு மேற்கொண்டனர்