தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஜோடிகள் உள்ளபட 135 ஜோடிகள் ஒரே அரங்கில் திருமண பந்தத்தில் இணைந்தனர்

மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு அருகே கபிலா நதிக்கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுத்தூர் மடத்தில், தமிழகத்தின் சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி பகுதிகளைச் சேர்ந்த மணமக்கள் உள்ளிட்ட, தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஜோடிகள் உள்ளபட மொத்தம் 135 ஜோடிகளுக்கு, ஒரே அரங்கில் இலவச திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

கர்நாடக மாநிலம் சுத்தூரில் அமைந்துள்ள ஆதிஜெகத்குரு ஸ்ரீ சிவராத்திரீஸ்வரா திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு விழா தற்போது மிகுந்த உற்சாகத்துடனும், ஆன்மிகப் பொலிவுடனும் நடைபெற்று வருகிறது

. ஒரு வாரம் முழுவதும் பல்வேறு ஆன்மிக, சமூக மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுடன் நடைபெறும் இந்த சுத்தூர் ஜாத்ராவின் முக்கிய நிகழ்வாக இலவச திருமணம் விளங்குகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு இலவச திருமண நிகழ்வு,
சுத்தூர் ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ சிவராத்திரி தேசிகேந்திர மகாசுவாமிகள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அவர் மணமக்களுக்கு மாங்கல்யம் வழங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.

இந்த நிகழ்வில் மணமகள்களுக்கு தாலி, சேலை, ரவிக்கை உள்ளிட்ட திருமணப் பொருட்கள் வழங்கப்பட்டன. அதேபோல் மணமகன்களுக்கு வேட்டி மற்றும் சட்டை வழங்கப்பட்டது.

இதில் தமிழகத்தின் சத்தியமங்கலம், தாளவாடி பகுதிகளைச் சேர்ந்தவர்களுடன், தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஜோடிகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
ஏழை மற்றும் எளிய மக்களுக்கு இலவசமாக திருமணம் செய்து வைத்து, அவர்களின் வாழ்க்கையில் புதிய ஒளியை ஏற்றி வைக்கும் பணியை சுத்தூர் மடம் தொடர்ந்து செய்து வருவது அனைவரிடமும் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

கோடிக்கணக்கில் செலவு செய்து திருமணங்கள் நடத்தப்படும் இக்காலகட்டத்தில், இவ்வாறு சமூகப் பொறுப்புடன், எளிய முறையில் நடத்தப்பட்ட இந்த இலவச திருமணம் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக அனைத்து தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்தனர்.

இந்த திருமண விழாவில் மணமக்களின் உறவினர்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மேலும் பல்வேறு மடாதிபதிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கிய விருந்தினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள்
தொடக்க விழா
மிகவும் மதிப்பிற்குரிய
ரெவ். பி. டாக்டர். கேப்ரியல் மார்க் கிரெகோரியஸ்
பிஷப், மெட்ரோபாலிடன்
இந்திய ஆத்தோடாக்ஸ் திருச்சபை, திருவனந்தபுரம்
சிறப்பு அழைப்பாளர்
திரு. டி.கே. சிவகுமார்
துணை முதல்வர் மற்றும் தலைவர்,
கர்நாடகப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி (KPCC)
தலைமை தாங்குதல்
ரெவ். பி. பிரான்சிஸ் செர்ராவோ எஸ்.ஜே.
பிஷப், மைசூரு
மங்கள்யம் வழங்கல்
திரு. ராமலிங்கா ரெட்டி
போக்குவரத்து மற்றும் மசுரைத் துறை அமைச்சர்
திருமணப் பொருட்கள் வழங்கல்
திரு. எஸ். எஸ். மல்லிகார்ஜுன்
தோட்டக்கலை, சுரங்கங்கள் மற்றும் புவியியல் துறை அமைச்சர்
சான்றிதழ்கள் வழங்கல்
திரு. ருத்ரப்ப மணப்ப லமாணி
துணைத் தலைவர், சட்டமன்றம்
உறுதிமொழி ஏற்பு

திரு. மங்கலா எஸ். வைத்யா
மீன்வளம், துறைமுகங்கள் மற்றும்
உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து துறை அமைச்சர்
முதன்மை விருந்தினர்கள்
திரு. விஜயானந்த எஸ். காசப்பனவர்
சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தலைவர்,
வீரசைவ–லிங்காயத் மேம்பாட்டு கழகம்
திரு. சி.சி. பட்டீல்
டாக்டர். பிரபா மல்லிகார்ஜுன்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், தாவனகெரே
திரு. அல்லம் வீரபத்ரப்பா
முன்னாள் அமைச்சர்
திரு. கே.வை. நஞ்சேகவுடா
டாக்டர். எச்.டி. ரங்கநாத்
சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தலைவர்,
கோமுல் (KOMUL)
திரு. பி. ரவிகுமார் கணிகா
திரு. தர்ஷன் துருவநாராயண்
சட்டமன்ற உறுப்பினர், மண்ட்யா
திரு. நஞ்சன்கூடு
சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *