கல்கத்தா மாநிலத்தில் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பயிற்சி பெண் மருத்துவரின் மரணத்திற்கு நீதி வேண்டி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்திட இந்திய மாணவர் சங்கம் அறைகூவல் விடுத்தது
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவம் பயின்று வந்தார். அவர், கடந்த 8 ம் தேதி இரவுப் பணியில் இருந்தபோது அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையில் உள்ள கருத்தரங்கக் கூடத்தில் தூங்கச் சென்றுள்ளார். இந்நிலையில், அடுத்த நாள் காலையில் அவர் அரை நிர்வாணக் கோலத்தில் சடலமாக மீட்கப்பட்டார். மருத்துவ மாணவியின் உடற்கூராய்வில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாணவியின் கழுத்து எலும்பு முறிக்கப்பட்டு அந்தரங்க உறுப்புகள், முகம், உதடுகள், கழுத்து, வயிறு, விரல்கள் மற்றும் கணுக்கால் ஆகிய இடங்களில் காயங்கள் உள்ளன. பிறகு அவரது மூச்சை நிறுத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மூன்று மருத்துவர்கள் குழு பிரேதப் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் கூட்டு பாலில் வன்புணர்வு நடத்தப்பட்டுள்ளது என்று மருத்துவ உடல் கூராய்வு தெரிவிக்கிறது.
இந்த கோரமான கொடுஞ்செயலுக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது மருத்துவர்கள் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் மேற்கு வங்கத்தில் மருத்துவக் கல்லூரியில் இரவு நேரத்தை நமதாக்குமோம் என்ற தலைப்பில் போராட்டம் நடைபெற்ற பொழுது ஆளும் TMC கட்சியின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படக்கூடிய மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவர்களைக் கண்டித்தும் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் ஆச்சார்படுத்த ப்பட வேண்டும் என்றும் முழுமையான விசாரணைக்கு மம்தாவின் அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க இருக்கும் இந்த வழக்கை உடனடியாக துரிதமாக விசாரித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வேண்டுகோள் விடுகிறது
மேலும் பயிற்சி மருத்துவருக்கு பாதுகாப்பு அளிக்க தவறியதும் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய மம்தா அரசை கண்டித்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வழங்க கோரியும் 20- 8- 2024 அன்று தமிழகம் முழுதும் போராட்டம் நடைபெறுகிறது.
அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் அரசு கலைக் கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் குரு பிரசாத் தலைமையில் ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் தே.சரவணன் கண்டன உரையாற்றினார்.மேலும் கல்லூரி மாணவர்கள் பிரசாந்த் மணி ஸ்ரீராம் விக்னேஷ் ஜனா உள்ளிட்ட 30 மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்