செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 1993 ம்
ஆண்டு வணிகவியல் பிரிவு முன்னாள் மாணவர்கள் சங்கம்
2025 2026 ம் ஆண்டு 10ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பில் முதல் மற்றும் இரண்டு மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி அச்சிறுப்பாக்கம் மாற்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.


அதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர் பி.எஸ்.உதயகுமார் முன்னிலையில் ஆசிரியர் பெருமக்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டது. பின்பு முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் வழக்கறிஞர் சீனிவாசன் மாணவர்களிடையே பேசுகையில் வாழ்வில் வெற்றி பெற விடாமுயற்சி, இலக்கு நிர்ணயித்தல் மற்றும் தோல்விகளைக் கண்டு அஞ்சாமை ஆகியவை மிக அவசியமானவை. நேற்றைய நாட்டை மாற்ற முடியாது, ஆனால் இன்றைய உழைப்பால் நாளைய வெற்றியை உங்களால் நிச்சியமாக உருவாக்க முடியும் என மாணவர்களை ஊக்குவிக்கும்
விதமாக சிறப்புரையாற்றினார் இந்நிகழ்வில் ஆசிரியர்கள் உதவி தலைமை ஆசிரியர் பரமேஸ்வரி
ஜெயமுருகன் முனியாண்டி தனியவேல் ரங்கநாதன் ஜெயபிரகாஷ் அசோக் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் 1993 ம் ஆண்டு வணிகவியல் முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் வழக்கறிஞர் சீனிவாசன்
ஸ்ரீ சைலன் செந்தில்முருகன் ஆனந்தன் பழனி ராஜாராமன் முருகன் கிருஷ்ணகுமார் வர்மா உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *