இந்திய எலும்பியல் சங்கத்தின் (IOA) எலும்பு மற்றும் மூட்டு வாரம் 2026 முன்னிட்டு, 3ஆம் நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி தென்காசி இணை இயக்குனர் நலப் பணிகள் அலுவலகத்தில் நடைபெற்றது. இணை இயக்குனர் நலப்பணிகள் அலுவலக பணியாளர்கள் மற்றும் மருத்துவமனை அலுவலக பணியாளர்களை என சுமார் 50 பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் சரியான உடல் நிலை (Posture), அலுவலகப் பணியின்போது கடைப்பிடிக்க வேண்டிய உடல் அமைப்பு, நீண்ட நேரம் கணினி மற்றும் கைப்பேசி பயன்படுத்துவதால் ஏற்படும் முதுகு மற்றும் கழுத்து வலிகளைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

டாக்டர் ஆர். ஜெஸ்லின் அவர்கள் பேசுகையில், “எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தினசரி உடற்பயிற்சி, சரியாக அமர்ந்து பணி செய்யும் முறை, பணியிடத்தில் கடைபிடிக்க வேண்டிய செயல்கள்,ஆரோக்கியமான வாழ்க்கை முறை அனைத்தும நீண்ட காலம் நாம் எலும்பு மூட்டு தொந்தரவு இல்லாமல் வாழ்வதற்கு கடைபிடிக்க வேண்டும் என கூறினார்.


நிகழ்ச்சியின் இறுதியில், எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி அனைவராலும் ஏற்கப்பட்டதுடன், விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் எலும்பியல் நிபுணர்கள் மது, ரவிச்சந்திரன், முத்துராமன் ஆகியோர் கலந்து கொண்டு எலும்பு ஆரோக்கியம் குறித்து விளக்கினார்கள்.இணை இயக்குனர் நலப் பணிகள் அலுவலர்கள் எலும்பு மூட்டு பிரச்சனைகள் குறித்து விரிவாக கேட்டு அறிந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *