தூத்துக்குடி மக்கள் குடிதண்ணீருக்காக வல்லநாட்டில் அதிகாலையில் களத்தில் இறங்கிய மேயர் ஜெகன் பொியசாமி ஆணையர் பிரியங்கா ஆய்வு


தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மக்களுக்கு வல்லநாடு ஆற்றுப்படுகையிலிருந்து அங்குள்ள பம்பிங் நிலையத்திலிருந்த குழாய்கள் மூலம் வல்லநாடு சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு அங்கு சுத்திகரிப்பு செய்யப்பட்டு தூத்துக்குடி மாநகரில் உள்ள 60 வார்டு பகுதி மக்களுக்கு 36 குடிநீர் நீர்தேக்க தொட்டி மூலம் சூழற்சி முறையில் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வல்லநாடு ஆற்று படுகையில் இருந்து வல்லநாடு சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரும் வழியில் மெயின் பைப்லைன் உடைப்பு ஏற்பட்டு இருப்பதாக மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி ஆணையர் ப்ரியங்காவுக்கு தகவல் கிடைத்தது.


இதனையடுத்து அதிகாலை மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி ஆணையர் பிரியங்கா மற்றும் மாநகராட்சி 20க்கும் மேற்பட்ட அதிகாரிகளுடன் முதலில் வல்லநாடு அகரம் பகுதியில் உள்ள நீரேற்று நிலையத்திற்கு சென்று அங்கு எவ்வளவு அளவு தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது என்று ஆய்வு மேற்கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *