செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே திருமுக்காடு வீர சாம்பவி திருக்கோயிலில் தை அமாவாசை சிறப்பு யாகம் நடைபெற்றது.
திருமுக்காடு ஊராட்சியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ வீர சாம்பவி திருக்கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு வீர சாம்பவி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் ஆராதனைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து உலக மக்கள் நன்மை வேண்டி ஸ்ரீ விஜயவீர சாம்பவி சுவாமிகள்
எதிரிகள் தொல்லை,தீராத கஷ்டங்கள் நீங்கவும், வாழ்க்கையில் நன்மைகள் பெருகவும், தடைகள் விலகி சுப காரியங்கள் திருமணம், குழந்தை பாக்கியம் நடைபெறவும்
தீய சக்திகளை அழித்து, நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் சக்தி வாய்ந்த வழிபாடு செய்து அமாவாசை நாட்களில், வேத மந்திரங்கள் முழங்க, மிளகாய் வத்தல்களை
யாக குண்டத்தில் கொட்டி இந்த யாகம் நடைபெற்று பக்தர்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மேலும் இந்த யாக பூஜையில் காஞ்சிபுரம், திருவள்ளூர்,சென்னை, செங்கல்பட்டு,
புதுச்சேரி ,கடலூர், மற்றும் பெங்களூர் கர்நாடகா, தெலுங்கானா, மாநிலங்களில் இருந்து மாதந்தோறும் நடைபெறும் அமாவாசை மிளகாய் யாகத்தில் பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீ வீர சாம்பவி அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.
மேலும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஸ்ரீ வீர சாம்பவி சித்த பீட நிர்வாக குழுவினர்
செய்து வருகின்றனர்.இதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் அன்னதானம் வழங்கினர்.