திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சித்தன் துறை ரோட்டில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் கடந்த 12.07.2024 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்று, தொடர்ந்து தினசரி உபயதாரர்களால் மண்டல அபிஷேக பூஜைகள் நடைபெற்று வந்தன. மண்டல அபிஷேக நிறைவு விழாவை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமமும், அதை தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்று, உபயதாரர்களால் வழங்கப்பட்ட தாமிர தங்க கவசம் அணிவித்து தீபாராதனை நடைபெற்றது,

அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.மாலை 6:00 மணி அளவில் முசிக வாகனத்தில் விநாயகர் வீதி உலா காட்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெரு, சித்தன் துறை ரோடு,கும்பகோணம் ரோடு தெருவாசிகள் நல சங்கம்,இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் உபயோதாரர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *