தாராபுரம்,
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர், உடுமலை சாலையில் உள்ள நகர அரிமா சங்கம்,கோவை.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை & விவேக் ரியல் எஸ்டேட் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச இருதயம் மற்றும் நுரையீரல் மருத்துவ ஆலோசனை கூட்டம் அரிமா தலைவர் டி.எஸ்.சிவகுமார் தலைமையில்,கோபாலகிருஷ்ணன், செந்தில்குமார்,சண்முகவேல்,பழனிச்சாமி,ஒருங்கிணைப்பாளர் ரத்னா சபாபதி ஆகியோர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த மருத்துவ ஆலோசனை கூட்டத்தில். தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் சுமார் 450-க்கும் மேற்பட்டவர்கள் இருதய சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஸ்ரீநிவாசன் & நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயரவிந்த் ஆகியோர்களிடம் தங்களது ரத்த அழுத்தம்,உடல் பருமன் நீரழிவு,இருதய எதிரொலி மற்றும் நுரையீரல் செயல்பாடு பரிசோதனை குறித்து கண்டறியப்பட்டு மருத்துவ ஆலோசனை சந்தேகங்களை அறிந்து கொண்டு சென்றனர்..
இம்மருத்துவ முகாமில் டி.எஸ்.சிவக்குமார்,முகமது அப்துல் காதர்,சீனிவாசன்,ராமச்சந்திரன் ஆகியோர்கள் சிறப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..
தாராபுரம் செய்தியாளர் பிரபு