கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர் ஆகியோர்களின் அறிவுறுத்தலின்படி, குறிஞ்சிப்பாடி வட்டாரம், வடலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்மாணவிகளுக்கு, வைட்டமின் பி12, வுடன் கூடிய இரும்புச்சத்து மாத்திரைகள், விநியோகிக்கப்பட்டன.நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர்வண்ணமுத்து தலைமை தாங்கினார்,சத்து குறைபாடு, இரும்புச்சத்து மாத்திரைகள்குறித்தும், விழிப்புணர்வு,மற்றும் சுகாதாரம் குறித்து மருத்துவ அலுவலர், மருத்துவர் பாலச்சந்தர், மருத்துவர் கவியரசி ,ஆகியோர் விழிப்புணர்வு உரையாற்றினார்கள்,

நிகழ்ச்சியினை தொடர்ந்து மாணவிகளில், லேசான இரத்த சோகை உள்ள 29, மாணவிகளுக்கும், மிதமான இரத்த சோகை உள்ள 104, மாணவியர்களுக்கும், வழங்கப்பட்டது, நிகழ்ச்சியில்,மருத்துவ அலுவலர், சமூக சுகாதார செவிலியர், கிராமசுகாதார செவிலியர், சுகாதார ஆய்வாளர் மற்றும்,கல்லூரி பேராசிரியர்கள் ஆகியோரால் விழிப்புணர்வும், அளிக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *