திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 45 வார்டு காந்திநகரில் உள்ள W-31/ 8-70 என்ற எண்ணிட்ட மின்கம்பம் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் மிகவும் மோசமாக உள்ளது. தனியார் பள்ளி மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இந்த மின்கம்பம் இருப்பதால், மின்சார வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அதை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மண்னை
க.மாரிமுத்து.