புதுச்சேரி

  • புதுச்சேரி மாநில பஜாஜ் பைனான்ஸ் நிர்வாகத்தை கண்டித்து முற்றுகை போராட்டம்-மனிதநேய மக்கள் சேவை இயக்கம்
    புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்கம் மற்றும் புதுச்சேரி பொதுநல அமைப்புகள் சார்பாக கந்து வட்டி போல் கடனை வசூல் செய்வது மட்டுமின்றி காவல்துறை அதிகாரிகள் போல் தொலைபேசியில் கடனாளிகளை மிரட்டுவது போன்ற நடவடிகளில் ஈடுபட்டு வரும் பஜாஜ் பைனான்ஸ் நிர்வாகத்தை கண்டித்து முற்றுகை போராட்டம் உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் – நிறுவனத் தலைவருமான G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் தலைமையிலும் மற்றும் புதுச்சேரி மாநில பொது நல அமைப்பு தலைவர்களின் தலைமையிலும் 30.04.2024… செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணியளவில் செட்டி வீதி ( காந்தி வீதி – மிஷன் வீதி ) இடைப்பட்ட பகுதியில் உள்ள பஜாஜ் பைனான்ஸ் நிர்வாகத்தை கண்டித்து போராடும் நடைபெற உள்ளது என்பதை தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இதில் நாம் மனித மக்கள் சேவை இயக்கத்தை சேர்ந்த போராட்ட குணம் கொண்ட அன்பு நெஞ்சங்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
  • புதுச்சேரியில் சுயேட்சை வேட்பாளர் மாஸ்கோ ஆர். எல். வி. ஜனநாயக பேரவையில் இணைந்தார்
    மக்களவை தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் மாஸ்கோ ஆர். எல். வி. ஜனநாயக பேரவையில் இணைந்தார்.!!!. சுமைதாங்கி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் S. மாஸ்கோ அவர்கள் RLV ஜனநாயக பேரவையின்நிறுவனத்தலைவர் R.L. வெங்கட்டராமன் அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து , தான் கடந்த 10 ஆண்டுகளாக வில்லியனூர் தொகுதியில் சுமை தாங்கி அறக்கட்டளை என்கிற டிரஸ்ட் நடத்தி வருகிறேன் என்றும்,. அதன் நிறுவனத் தலைவராகவும் இருந்து வருகிறேன். அதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்துள்ளேன் என்றும், கொரோனா காலத்தில் கூட என்னால் முடிந்தவரை எனது சுமைதாங்கி அறக்கட்டளை மூலம் உத்தரவானி பேட் பகுதியில் வசிக்கும் அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் உணவு, அரிசி மற்றும் மளிகை பொருட்களை கொடுத்து உதவி செய்து வந்துள்ளேன் என்றும், மக்களவை தேர்தல் முடிந்தும் கூட இரண்டு நாட்களுக்கு முன்பாக கோடை காலத்தில் வெப்பம் தாக்கத்தினால் வெளியில் செல்ல முடியாமல்… Read more: புதுச்சேரியில் சுயேட்சை வேட்பாளர் மாஸ்கோ ஆர். எல். வி. ஜனநாயக பேரவையில் இணைந்தார்
  • மாமல்லபுரத்தில் தேரோட்டம்
    மாமல்லபுரத்தில் தேரோட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்தல சயன பெருமாள் திருக்கோயில் சித்ரா பௌர்ணமி நாளான தேரினை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்வு நடைப்பெற்றது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து பரவசமடைந்தனர்
  • சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம்
    எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் ஏராளமானோர் சிறப்பு வழிபாடு :- மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஆதி இராகுஸ்தலமான நாகேஸ்வரமுடையார் கோயிலில் சித்திரை மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது. சீர்காழி கடைவீதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பொன்னாகவல்லி உடனாகிய நாகேஸ்வரமுடையார்கோயில் உள்ளது. இக்கோயில் ஆதிஇராகுஸ்தலமாக விளங்குகிறது. இங்கு தனிசன்னதியில் இராகு பகவான் அருள்பாலிக்கிறார்.இந்த கோயிலில் சித்திரை மாத பிரதோஷத்தையொட்டி நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மஞ்சள்,திரவியபொடி,பால்,தயிர், தேன்,பன்னீர்,பஞ்சாமிர்தம்,விபூதி,சந்தனம் முதலான நறுமன திரவியபொருட்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் மூலவர் நாகேஸ்வரமுடையார்,நந்திபகவானுக்கு சிறப்பு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
  • புதுவை பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர்வெ. வைத்தியலிங்கம் தனது வாக்கினை பதிவு செய்தார்
    புதுவை பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர்வெ. வைத்தியலிங்கம் தனது சொந்த ஊரான மடுகரைக்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். மடுகரை அரசு நடுநிலைப் பள்ளியில் தனது வாக்கினை செலுத்தி விட்டு வெளியில் வந்து மை வைத்த விரலைக் காட்டி விட்டு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். புதுவை மக்கள் மட்டுமல்ல இந்தியாவின் அனைத்து மாநில மக்களும் மத்தியில் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். வெற்றி வாய்ப்பு எனக்கு மிக பிரகாசமாக உள்ளது என்பதை நான் புதுவையின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று நேரடியாக பார்த்துவிட்டு தான் இங்கு மடுகரைக்கு வந்திருக்கிறேன்என்று பாராளுமன்ற வேட்பாளர் வெ. வைத்திலிங்கம் கூறினார்