தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரம் அருகே உள்ள பொன்னாபுரம், நாரணாபுரம் மற் றும் தாசார்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் தேங் காய் தொட்டிகளை எரிக்கும் ஆலைகள் செயல்பட்டு வருகின் றன. இந்த ஆலைகளால் மக்கள் அவதிப்படுவதாகவும், எனவே அவற்றை அகற்ற வேண்டும் என்று கிராமமக்கள், கலெக்டருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் மனு அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் தேங்காய் தொட்டி எரிக்கும் ஆலைகளை ஆய்வு செய்யுமாறு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். அதன் அடிப்ப டையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்பவ இடத் திற்கு வந்து ஆய்வு செய்தனர்.

இடித்து அகற்றம்

அந்த ஆய்வின் மூலம் 5 க்கும் மேற்பட்ட தேங்காய் தொட்டி எரிக்கும் ஆலைகளில் இருந்து காற்று,நீர்,நிலம் மாசுபடுவ தாக அறிக்கை சமர்ப்பித்தனர். இதையடுத்து கலெக்டர் உத்த ரவின்படி தாராபுரம் ஆர்.டி.ஓ. பெலிக்ஸ் ராஜா, தாசில்தார் ராமலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று தேங்காய் தொட்டிகளை எரிக்கும் ஆலைகளுக்கு ‘சீல்’ வைத்தனர். இதையடுத்து அங்கு உள்ள தேங்காய் தொட்டிஎரிக்கும் ஆலைகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *