தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழ்நாடு ஹோட்டல் அசோசியன் தலைவரும்,டார்லிங் குழுமத்தின் நிர்வாக இயக்குனருமான வெங்கடசுப்புவின் புதிய கிளையாக என் ஐ ஆர் ரோட்டில் டார்லிங் ஷோ ரூம் (எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பர்னிச்சர் ) துவக்கவிழா நடைபெற்றது.
இந்த புதிய டார்லிங் ஷோ ரூமை கட்டிட உரிமையாளர் வெற்றி முஸ்தபா, சாராபேகம் ஆகியோர் திறந்து வைத்தனர்.
பெரியகுளம் வியாபாரிகள் சங்கத் தலைவர் மணிவண்ணன்,கவிதா மார்த்தாண்டம்,பெரியகுளம் வர்த்தக சங்க தலைவர் சிதம்பரம் சூரிய வேலு, பெரியகுளம் வர்த்தக சங்க செயலாளர் சீதாராமன்,மற்றும் சங்க பொறுப்பாளர் இராஜவேல் அனைத்து வியாபாரிகள் நல சங்கம் பொறுப்பாளர் செந்தில், பெரியகுளம் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நிஜத் ரஹ்மான்,தமிழ்நாடு பிரஸ் கிளப் மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா ஆகியோர் குத்துவிளக்கேற்றி சிறப்பு செய்தனர்.
ஹையர் அப்ளைன்ஸ் இந்தியா பிரைவைட் லிமிடெட் விற்பனை துறையின் துணைப்பொது மேலாளர் ஆறுமுகம் டார்லிங் குழுமத்தின் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பெரியகுளம் திமுக முன்னாள் நகர செயலாளர் முரளி,திமுக மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார்,பெரியகுளம் நகர் வளர்ச்சி நிர்வாகிகள் அன்புக்கரசன்,மணி கார்த்திக், திமுக பிரமுகர் ஜீவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
டார்லிங் குழுமத்தின் நவராஜா முருகன்,முரளி,நவீன், பாலகிருஷ்ணன், ஜேம்ஸ்,அஜித்குமார் ஆகியோர் வரவேற்றனர்