திருவெற்றியூர்
தமிழகத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு திருவொற்றியூர் மண்டல குழு தலைவரும் திருவொற்றியூர் கிழக்குப் பகுதி திமுக செயலாளர் திமு தனியரசு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். திருவொற்றியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவ – மாணவியர்கள் பேராசிரியை செல்வ மீனா தலைமையிலும், வி .ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி எல் எஸ் எஸ் மாணவ – மாணவியர்கள் என் எஸ் எஸ் ஆபிஸர் டி . தினகரன் சரவணன் பழனி மற்றும் தாம்சன் ஆகியோர் தலைமையில் இரு கல்லூரி மாணவ மாணவியர்கள் ஒன்றிணைந்து திருவொற்றியூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் இருந்து திருவொற்றியூர் மேற்கு மாட வீதி திருவொற்றியூர் தெற்கு மாட வீதி மற்றும் திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக என் வாக்கு என் உரிமை கோஷமிட்டவாறு திருவொற்றியூர் மண்டல அலுவலகத்திற்கு வாக்காளர்கள் விழிப்புணர்வு பேரணியாக ஊர்வலம் வந்தனர்.
பின்னர் திருவொற்றியூர் மண்டல அலுவலகம் முன்பு கல்லூரி மாணவ மாணவியர்கள் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்து வைத்திருந்தனர். மேலும் கல்லூரிகளில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஓவியப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழுடன் எவர்சில்வர் டிபன் பாக்ஸ் பரிசளித்தார்கள். முன்னதாக தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் மண்டல அலுவலர் பத்மநாபன் தாசில்தார் திலீப் குமார் எ ஆர் ஓ அர்ஜுன்சிங் மதன் கோபால் உள்ளிட்டவர்களுடன் திருவொற்றியூர் மண்டல தேர்தல் அலுவலர் சோபியா மற்றும் ப்ரோகிராமர் குமரவேல் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.