திண்டுக்கல் மாவட்டம் பழனி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்ற கோப்புகளை ஆய்வு செய்வதற்காக மாவட்ட முதன்மை நீதிபதி முத்து சாரதா வருகை தந்தார்.
தொடர்ந்து நீதிமன்ற வளாகத்துக்குள் வருகை தந்த மாவட்ட முதன்மை நீதிபதியை பழனி ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதிகள் பூக்கொத்துக் கொடுத்து வரவேற்றனர்.
மேலும் நீதிமன்ற கட்டிடவளாகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட இ சேவா கேந்திரா மையத்தை மாவட்ட முதன்மை நீதிபதி முத்து சாரதா ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து நீதிமன்ற பணிகளுக்கு உட்பட்ட அனைத்து கோப்புகளையும் இரண்டு நாட்களுக்கு ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இந்த இ-சேவை கேந்திரா மையத்தின் மூலம் நீதிமன்றத்திற்கு வரும் வழக்கறிஞர்கள் காவல்துறை அதிகாரிகள் இதர அரசுத்துறை சார்ந்தோர் மற்றும் பொதுமக்கள் எளிதாக வழக்கு ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கும் பொது மக்கள் எளிய முறையில் தங்களுடைய வழக்கு நிலையை அறிந்து கொள்வதற்கும் வாய்தா விவரங்கள் பற்றி தெரிந்து கொள்வதற்கும் இந்த இ சேவை கேந்திர மையம் உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து இந்நிகழ்வில் கூடுதல் மாவட்ட நீதிபதி முதன்மை சார்பு நீதிபதி கூடுதல் சார்பு நீதிபதி உரிமையியல் நீதிபதி குற்றவியல் நீதித்துறை நீதிபதி அரசு வழக்கறிஞர்கள் பழனி வழக்கறிஞர் சங்க தலைவர் அங்குராஜ் செயலாளர்
கலை எழில்வானண் மற்றும் நிர்வாகிகள் காவல்துறை உயர் அதிகாரிகள் இதர அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.