கம்பம் நகரில் தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு 10-வது ஆண்டு நிறைவு ஆண்டை கொண்டாடும் விதமாக சிறப்பு மருத்துவ முகாம் நகர் மன்ற தலைவர் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி நகர் நல மருத்துவமனையில் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில் தூய்மையே சேவை 2024 உள்ளாட்சி அமைப்புகளில் ஆறாம் கட்டமாக நடைபெற்று வருகிறது

இதன்படி நேற்று நகர் நல மருத்துவமனையில் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமை வகித்து சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார் இந்த முகாமில் கம்பம் நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உடல் நலத்துக்கு தேவையான அனைத்து பரிசோதனகள் செய்யப்பட்டு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டும் தேவையான மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன

இந்த முகாமில் கம்பம் நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தார்கள் மருத்துவ சேவை பெற்று பயன்பெற்றார்கள் இந்த முகாமில் நகராட்சி சுகாதார அலுவலர் அரசகுமார் ஆய்வாளர்கள் சக்திவேல் பால்பாண்டி நகர் மன்ற உறுப்பினர் ஜெ. அன்பு குமாரி . உள்பட பலர் கலந்து கொண்டனர் இந்த முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் நகர் நல மருத்துவமனை
மருத்துவர்கள், செவிலியர்கள் சிறப்பான மருத்துவ சேவை அளித்து முகாமை சிறப்பித்தனர் இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை நகராட்சி ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *