சங்கரன்கோவிலில் போதை ஒழிப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம்
கவர்னர் ஆர் என் ரவி பங்கேற்பு
தென்காசிஅக்.6-
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வாய்ஸ் ஆப் தென்காசி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் ராஜபாளையம் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.
சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் அருகே தொடங்கிய பேரணி கூட்டம் நடைபெறும் இடத்திற்கு இடத்தை வந்தடைந்தது அதனைத் தொடர்ந்து பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து நடைபெற்ற போதை ஒழிப்பு கூட்டத்தில் தமிழ்நாடு கவர்னர் ஆர் என் ரவி கலந்து கொண்டு பேசினார். முன்னதாக வாய்ஸ் ஆப் தென்காசி நிறுவனர் ஆனந்தன் வரவேற்றார் அதனை தொடர்ந்து மனிதநேயம் அறக்கட்டளை நிறுவனர் சைதை துரைசாமி, சோகோ நிறுவன தலைமை செயல் அதிகாரி பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு ஆகியோர் போதை ஒழிப்பு குறித்து பேசினர்.