கோவை சரவணம்பட்டி சிவானந்தாபுரம் பகுதியில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் புதிய கிளை துவக்க விழா நடைபெற்றது..
காட்டன் வேஷ்டி, சர்ட்டுகளுக்கான பிராண்டில் இந்தியாவின் நம்பிக்கைகுரிய முன்னனி நிறுவனமாக ராம்ராஜ் காட்டன் நிறுவனம் உள்ளது..
தென்னிந்தியாவில் வெண்மை நிற ஆடைகளை உற்பத்தி செய்து, விற்பனையில் சாதனை படைத்து வரும், ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தமிழகத்திலுள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் தனது ஷோரும்களை திறந்து விற்பனையை விரிவு படுத்தி வருகிறது.
இந்நிலையில் ,ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தனது புதிய கிளையை கோவை ,சரவணம்பட்டி,சிவானந்தாபுரம் பகுதியில் துவங்கி உள்ளது.
ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர். நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இதற்கான துவக்க விழாவில்,சிறப்பு அளிப்பாளர்களாக ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் என்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி தலைவர் டாக்டர். S. தங்கவேலு கலந்து கொண்டு புதிய ஷோரூமை துவக்கி வைத்தார்..
செல்வம் ஏஜென்சிஸ் நிர்வாக இயக்குனர் நந்தகுமார் முதல் விற்பனையை துவக்கி வைக்க அவரிடமிருந்து டேனி ஷெல்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் சிவராமன் கந்தசாமி பெற்றுக்கொண்டார்.
விழாவில் இணை நிர்வாக இயக்குனர் அஸ்வின் கலந்து கொண்டார்..
புதிதாக துவங்கப்பட்ட கிளையில், அட்ஜஸ்டபிள் வேட்டி, பேன்சி பார்டர் வேட்டி, கறை படியாத வேட்டி, நறுமண வேட்டி, ரிங்கிள் பிரி வேட்டி, சுப முகூர்த்த வேட்டி, எம்ப்ராய்டரி வேட்டி, மயில்கண் வேட்டி, பஞ்ச கச்ச வேட்டி, பட்டு வேட்டி என வேட்டி ரகங்கள் ஏராளம் காட்டன் சர்ட்டுகள். எம்பராய்டரி சர்ட்டுகள், ரிங்கிள் பிரி்’சர்ட்டுகள், கூல் காட்டன் சர்ட்டுகள். சுபமுகூர்த்த சர்ட்டுகள், அல்டிமேட் சர்ட்டுகள், டிசைனர் சர்ட்டுகள், பட்டு சாட்டுகள், பார்டர் மேட்சிங் லினன் சர்ட்டுகள் என ரகங்கள் ஏராளமாக உள்ளன. இளைஞர்களுக்கான பல வண்ணங்களில் டி- சர்ட்டுகளும் இங்கு உள்ளன…
மேலும் இளைஞர்களை கவரும் வகையில் யூத் கலெக்ஷன் மற்றும் குழந்தைகளுக்கான வேட்டி சட்டைகள், இளைஞர்களை கவரும் வகையிலான வெல்குரோ பாக்கெட் வேட்டிகள், லினன் சரட்டு வகைகளும், பெண்களுக்கான உள்ளாடைகள், லெக்கின்ஸ், சிம்மிஸ் மற்றும் அனைத்து விதமான உள்ளாடைகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது..