யூனியன் வங்கியின் 106 வது நிறுவன தின விழா கோவை பிராந்தியம் சார்பாக வெகு விமரிசையாக நடைபெற்றது…

கடந்த 1919 ஆம் ஆண்டு துவங்கி இன்று வரை யூனியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு தமது சேவையை தொடர்ந்து சிறப்பாக வழங்கி வருகிறது..

இந்நிலையில் யூனியன் பேங் ஆஃப் இந்தியா தனது 106 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் யூனியன் வங்கியின் 106 வது நிறுவன தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது..

முன்னதாக மும்பையில் நடைபெற்ற விழாவில் யூனியன் வங்கியின் தலைமை செயல் அலுவலர் மற்றும் நிர்வாக இயக்குனர் மணிமேகலை 106 வது நிறுவன விழாவை நினைவு கூறும் விதமாக வங்கியின் 5 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தினார்..

இதன் தொடர்ச்சியாக கோவை சர்தார் வல்லபாய் பட்டேல் கல்லூரி அரங்கில் யூனியன் வங்கியின் கோவை பிராந்தியம் சார்பாக நிறுவன தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.இதில் வங்கியின் வாடிக்கையாளர்கள்,ஊழியர்கள் அவர் தம் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்..விழாவில் மும்பையில் நடைபெற்ற நிறுவன தின விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது..

தொடர்ந்து வங்கி ஊழியர்களின் குடும்பத்தினர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.நிகழ்ச்சியின் இறுதியாக கோவை பிராந்திய துணை பொது மேலாளர் எஸ்.எஸ்.
லாவண்யா நன்றியுரை வழங்கினார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *