தஞ்சை மாவட்ட கலெக்டர் உத்தரவின்படியும், மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அறிவுரையின் படியும் சோழபுரம் பேரூராட்சி பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை குறித்து சோதனை செய்யப்பட்டது. அதில் செயல் அலுவலர் சு.சிவசந்திரன், இளநிலை உதவியாளர் தேவேந்திரன் துப்புரவு ஆய்வாளர்
துப்புரவு மேற் பார்வையாளர்கள் ஆகியோர் சோழபுரம் பகுதியில் உள்ள கல்வி நிலையங்கள் அருகில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்கப்படுகிறதா? என சோதனை செய்து,பொதுமக்கள் புகையிலை பொருட்கள் உபயோ கத்தை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
முன்னதாக சோழபுரம் கடை வீதிகளில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலை,தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளதா என கடை உள்ளே சென்று ஆய்வு செய்தனர்.