சென்னை, சி.ஐ.டி. காலனியில் அமைந்துள்ள திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி இல்லத்தில், திமுக இளைஞரணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு கனிமொழி கருணாநிதி எம்.பியின் தாயார் ராஜாத்தி அம்மாவிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்றார். மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.