தூத்துக்குடியில் நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் என்ற புதிய கட்சியானது தொடங்கப்பட்டுள்ளது… தூத்துக்குடி வ உ சி சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் தூத்துக்குடியை சேர்ந்த பொன் குமரன், பொதுச் செயலாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன், பொருளாளர் சிவா முத்துக்குமார் ஆகியோர் கட்சி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி கட்சியை தொடங்கி வைத்தனர்..

லஞ்சம் ஊழல் ஒழிப்போம், டாஸ்மாக் அகற்றுவோம், கல்வியை வளர்ப்போம், தொழிலை பெருக்குவோம், விவசாயத்தை மேம்படுத்துவோம், நவீன மருத்துவ வசதிகளை அதிகரிப்போம் போன்றவைகளை கொள்கைகளாக கொண்டு இந்த கட்சி தொடங்கப்பட்டு இருக்கிறது…

கட்சியின் பொதுச்செயலாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறும் போது., சுதந்திரமாக வாழ்வதற்கும், பொருளாதார ரீதியாக உயர்வதற்கும் நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் கட்சி தொடங்கப்பட்டுள்ளது. ஆண்ட கட்சி, ஆண்டு கொண்டிருக்கின்ற கட்சிகள் அவர்களின் கட்சித் தொண்டர்களுக்கு எந்த உரிமையையும் வழங்கவில்லை. ஆனால் இந்த கட்சியில், அடிப்படை உறுப்பினர்களுக்கு கூட எம்எல்ஏ, எம்பியாக அதிக வாய்ப்பை உருவாக்கி தருவோம்.

கட்சியின் கொள்கை லஞ்சத்தை ஒழிப்போம், டாஸ்மாக்கை மூடுவோம், கல்வியை வளர்ப்போம் என்பதே., வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கின்றோம். விரைவில் ஆலோசனை நடத்தி எந்த தொகுதியில் எத்தனை பேர் வேட்பாளர் என்பதை தெரிவிப்போம். இன்று மட்டும் 200 பேர் கட்சியில் உறுப்பினர்களாக சேர்ந்து இருக்கின்றோம்.

முதல் முறையாக அரசியலுக்கு வருகின்ற கட்சிகள் சில உறுப்பினர்களைக் கொண்டுதான் தொடங்கப்பட்டிருக்கிறது. இது தான் மறுக்க முடியாத உண்மை. நடிகர் விஜய்யாக இருந்தாலும் கூட வந்த உடனேயே முதல்வராக வேண்டும் என்று தான் நினைக்கின்றார்களே தவிர எந்த சிஸ்டம் தவறாக இருக்கிறது என்று யாரும் சொல்லவில்லை.

நடிகர் விஜய், ரஜினி, சீமான் ஆகியோர் எந்த சிஸ்டம் தவறாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டி அதனை திருத்துகிறோம் என்று கூறியிருந்தால் நாங்கள் புதிதாக கட்சி தொடங்கியிருக்கவே மாட்டோம். அதற்கான சூழ்நிலையும் வந்திருக்காது. இந்தக் கருத்தை நடிகர் விஜயோ வேறு அரசியல் தலைவர்கள் முன்வைத்தால் அவர்களுக்கு ஆதரவு கொடுப்போம் என்றார்..

மேலும், தூத்துக்குடியை சேர்ந்த தலைவர் பொன் குமரன், பொதுச் செயலாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன், பொருளாளர் சிவா முத்துக்குமார் ஆகியோர் இதற்கு முன் பாரதிய ஜனதா கட்சியில் தூத்துக்குடியில் நிர்வாகிகளாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டி : அருணா தேவி ரமேஷ் பாண்டியன், நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் கட்சியின் பொது செயலாளர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *