தாராபுரம் செய்திகள் பிரபு
செல்:9715328420

செம்மம்பாளையம் கிராமத்தில் புதிதாக அமைய இருந்த ஜெபக்கூடம் இந்து அமைப்புகளால் தடுத்து நிறுத்தும்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் பகுதியில் அமைந்துள்ள சூரியநல்லூர் கிராமத்தில் செம்மம்பாளையம் கிராமத்தில் பழைய ஜெபக்கூடம் ஒன்று இருந்தது. அந்த ஜெப கூடத்தில் கிறிஸ்தவர்கள் பல ஆண்டுகளாக ஜெபம் செய்து வந்தனர்.அந்த ஜெபக்கூடம் அருகிலேயே புதிதாக கிறிஸ்துவ அமைப்புகள் சார்பில் புதிய ஜெபக்கூடம் கட்டப்பட்டு நாளை இன்று திறப்பு விழா காண இருந்தது. புதிய ஜெபக்கூடம் கட்டப்பட்டு திறப்பு விழாவிற்கு அதே பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் சேர்ந்து புதிய ஜெபக்கூடம் கட்டி திறப்பு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து குண்டடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் தாராபுரம் தாசில்தார் அலுவலகத்தில் 31.01.26 பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து நேற்று தாசில்தார் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இந்து அமைப்புகளை சார்ந்த பாரதிய ஜனதா கட்சி, விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் கிராம கோவில் பூசாரிகள் பேரவை நிர்வாகிகள் மற்றும் கிறிஸ்துவ அமைப்பு சேர்ந்த நிர்வாகிகள் என கலந்து கொண்டனர். அப்போது இந்து அமைப்பினர் ஏற்கனவே இருந்த ஜெப வீட்டில் வழக்கம் போல் ஜெபம் செய்வதற்கு யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. நீங்கள் புதிதாக கட்டி நாளை திறப்பு விழா காண உள்ள ஜெபக்கூடத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என தாசில்தாரிடம் தெரிவித்தனர்.

புதிதாக கட்டப்பட்டு வரும் ஜப கூடத்திற்கு கட்டிட அனுமதி கிடையாது அதனால் ஜெபக்கூடத்தை திறக்க கூடாது என இந்து அமைப்புகள் சார்பில் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி பழைய ஜெபக்கூடத்தில் அங்குள்ள கிராம மக்களுக்கு இடையூறு இல்லாமல் ஜெபம் நடைபெற்று வருகிறது. புதிய ஜெபக்கூடத்தில் ஒலிபெருக்கி வைத்து ஜபம் நடந்தால் கிராம மக்களின் ஒற்றுமை பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

இதனைக் கேட்டறிந்த தாசில்தார் ராமலிங்கம் தற்சமயம் புதிய ஜெபக்கூடத்தை இன்று திறக்க வேண்டாம் என கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட கிறிஸ்துவ அமைப்பும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *