அரியலூரில் நடந்தது தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தை கூட்டுறவுத் துறைக்கு தாரை வார்க்க துடிக்கும் நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

அரியலூர் மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்றது மண்டல தொமுச தலைவர் நாராயணன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் அய்யாதுரை முன்னிலை வகித்தார் அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் ஐயப்பன், தொமுச அலுவலக செயலாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொமுச நிர்வாகிகள் தொமுச மண்டல பொருளாளர் ராமகிருஷ்ணன் பாண்டியன், ஏ பாண்டியன், ஐ என் டி யு சி தொழிற் சங்கதத்தை சேர்ந்த பி சேகர் பாஸ்கர் தங்கவேலு அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் சசிகுமார் வெங்கடேசன் மற்றும் தொமுச பொருளாளர் ராமகிருஷணன் தொமுச மண்டல துணை தலைவர் ராமமூர்த்தி உட்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். தொமுச அலுவலக செயலாளர் பழனியப்பன் அனைவருக்கும் நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *