மதுரை மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி பணிகள் ஆய்வு…
மதுரை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையினரால் கோமாரி நோய் தடுப்பூசி பணிகள் ஆய்வு நடைபெற்றது. கால்நடை பராமரிப்புத் துறையினரால் கடந்த டிசம்பர் மாதம் 16 ம் தேதி முதல் மாவட்டம் முழுவதிலும் கால்நடைகளுக்
கான கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனை ஆய்வு செய்வதற்காக சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து நோய் நிகழ்வியல் ஆய்வுப் பிரிவு அலுவலர் மருத்துவர் ராஜா ராமன் ஆய்வு செய்தார்.
கடந்த இரண்டு நாட்களாக இப்பணிகளை நேரடியாக ஆய்வு செய்து வரும் அவர் திருமங்கலம் கோட்டத்திற்குட்பட்ட பாலமேடு, குட்டி மேய்க்கிப்பட்டி, வைகாசி பட்டி போன்ற பகுதிகளில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முறையாக செலுத்தப்
பட்டுள்ளதா ? அதனால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா ?என்பது பற்றி பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.
இன்னும் அநேக பகுதிகளில் குமாரி நோய் தடுப்பூசி களை செலுத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று துறை பணியாளர் களுக்கு உத்தர விட்டிருந்தார்மதுரை மாவட்டத்தில் மேலூர் பகுதியில் உள்ள பட்டூர் மற்றும் மதுரை கருப்பாயூரணி, ஐராவதநல்லூர் போன்ற பகுதிகளில் கோமாரி நோய் தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார் .
தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆய்வு செய்ய உள்ளார் மதுரை மண்டல இணை இயக்குனர் டாக்டர் சுப்பையன், மதுரை உதவி இயக்குனர் டாக்டர் பழனிவேலு, திருமங்கலம், உதவி இயக்குனர் டாக்டர் சரவணன், நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் டாக்டர் கிரிஜா மற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள் விவேக், தங்கபாண்டியன், நவநீதக் கண்ணன், புஷ்பலதா ஆகியோர் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர்.