திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட மேல்மலையில் உள்ள மன்னவனூர் ஊரிலிருந்து கைகாட்டி போகும் சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் பல வருடமாக உள்ளது.இச்சாலை வழியாக பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் வயதானவர்கள் கீழே விழுந்து செல்லும் அவல நிலை உள்ளது.அவசர காலங்களில் வாகன ஓட்டிகள் முதல் இச்சாலை வழியே இரவில் கடந்து செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி இச்சாலை வழியாக செல்லும் போது விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதனை போர்கால அடிப்படையில் கொடைக்கானல் நெடுஞ்சாலைத்துறையினர் புதிய சார் சாலையினை விரைவில் அமைத்து தருமா ? பொதுமக்களின் அன்றாட தேவைகளுக்கு பயன்பாட்டில் உள்ள இச்சாலையினை சரிசெய்யுமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.