கடலூர் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி,அமைப்புகளிலுள்ள வார்டுகளைச் சேர்ந்தவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய,அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

வடலூரில்,தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,திருச்சி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தினை காணொலி காட்சிவாயிலாக (06.02.2026) துவக்கி வைத்ததை தொடர்ந்து, கடலூர் மாவட்டம், வடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்,வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சித்தலைவர்,சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் ஆகியோர் முன்னிலையில் 447வார்டுகளைச் சேர்ந்தவர்களுக்கு, 717 டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் பணியினை தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்ததாவது,தமிழ்நாடு அரசு தமிழகத்தில் அதிகளவில் விளையாட்டு வீரர்கள் உருவாகிட வேண்டும் என்பதற்காகவும், தங்களது திறமைகளை வளர்த்து கொள்வதற்காகவும், மேம்படுத்தி கொள்வதற்காகவும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், விளையாட்டினை மேம்படுத்திடவும், அதிகமான இளைஞர்கள் தங்களது தனித்திறன்கள் மூலம் வெற்றிபெற்றிடவேண்டும் என்பதற்காக பல்வேறு விளையாட்டுப்போட்டிகளை நடத்தி வருகிறார்கள்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின், விளையாட்டுத் துறைக்கு பொறுப்பேற்ற பிறகு உலகத் தரத்திலான போட்டிகளை நடத்தி இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் விளையாட்டுத்துறையில் திறமையாளர்களை உருவாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் ஏற்கனவே விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடலூர் மாவட்டத்தில் 25.11.2024 அன்று நடைபெற்ற கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கும் விழாவில்,683 ஊராட்சிகளுக்கு, 33 விளையாட்டு,உபகரணங்கள் அடங்கிய 835,தொகுப்புகளை வழங்கினார்.
அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வசிக்கும் இளைஞர்கள் மற்றும்
விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களும் இத்திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில்,தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின், 2024-2025ஆம் நிதி ஆண்டிற்கான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் மானியக்கோரிக்கையின் போது. டாக்டர் கலைஞர் கருணாநிதி விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தினை மேலும் விரிவுபடுத்தி, அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆகிய நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதனடிப்படையில் தமிழ்நாடு துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் காணொலி காட்சி வாயிலாக நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்ததை தொடர்ந்து, கடலூர் மாவட்டத்திலுள்ள கடலூர் மாநகராட்சியில் 135 தொகுப்புகளும், 6 நகராட்சிகளில் 360 தொகுப்புகளும் மற்றும் 14 பேரூராட்சிகளில் 222 தொகுப்புகளும் என மொத்தம் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 447 வார்டுகளுக்கு 30 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 717 தொகுப்புகள் வழங்கும் பணி இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டது.

விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் வீராங்கணைகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார்கள். அதனடிப்படையில் பல்வேறு அரசு துறைகளில் விளையாட்டு வீரர்கள் அலுவலர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். மேலும், இந்தாண்டு 120 விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அறவித்துள்ளார்.

இதனால் விளையாட்டில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல எதிர்காலமில்லை என்ற நிலை மாற்றப்பட்டு அவர்கள் சாதனையாளர்களாக மாற்றப்படுகின்றனர்.
கடலூர் மாவட்டத்தினை சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீராங்கனைகள் சுமித்ரா மற்றும் சந்தியா. இவர்கள் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் கால்பந்து விளையாட்டிற்கான பயிற்சி பெற்று பல்வேறு தேசிய மற்றும் உலகளாவிய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்று, தற்போது அரசு அலுவலர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களைப் போன்று கடலூர் மாவட்டத்தினை சேர்ந்த மற்ற விளையாட்டு வீரர்களும் தங்களது தனித்திறன்களை வளர்த்துக்கொண்டு கடினஉழைப்புடன் விளையாடினால் வாழ்வில் மேன்மையடையலாம் என வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் வடலூர் நகரமன்ற தலைவர் சிவக்குமார், துணைத்தலைவர் சுப்புராயலு, மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார், கடலூர் வருவாய் கோட்டாட்சியர் சுந்தரராஜன்,வடலூர் நகர செயலாளர், தமிழ்செல்வன், பயிற்சியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

“செய்தி, ஜீவா செந்தில் “
.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *