பிரபு தாராபுரம்
செய்தியாளர்
செல்:9715328420
தாராபுரம் சாலை பாதுகாப்பு வார விழாவை யொட்டி ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த இருசக்கர வாகன பேரணி!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம், ஊர்க்காவல் படையினர்.
காவல்துறை இணைந்து நடத்திய ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த இருசக்கர வாகன பேரணி நடந்தது.
சாலை பாதுகாப்பு குறித்து மக்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 11-ம் தேதி முதல் சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு சாலை போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவதன் அவசியம், விபத்துகளை குறைக்க எடுக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து மக்கள் மத்தியில் வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம், ஊர்க்காவல் படையினர்.
காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது.
(பொறுப்பு) வட்டார போக்குவரத்து அலுவலர்,ராஜாராம்
பங்கேற்று கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பின்னர் ெஹல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டி பேரணியில் கலந்து கொண்டார். இந்த பேரணியில்
வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஊர்க்காவல் படையினர் போக்குவரத்து போலீசார் என சுமார் 70 இரு சக்கர வாகன ஓட்டிகள் கொண்டனர்.
தாராபுரம் நீதிமன்றம் வளாகத்தில் தொடங்கிய பேரணி தாலுகா அலுவலக சாலை வழியாக அலங்கியம் ரவுண்டானா உடுமலை ரவுண்டானா பேருந்து நிலையம் அமராவதி ரவுண்டானா. பொள்ளாச்சி சாலை. பூக்கடைக்காரர் பெரிய கடைவீதி அண்ணா சிலை எற 6-கிமீ தூரத்திற்கு இப்பேரணி நடந்தது.
அங்கு நடந்த நிகழ்ச்சியில் அவ்வழியாக ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்த வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை சார்பில் ஹெல்மெட்களை மோட்டார் வாகன ஆய்வாளர்.செந்தில்குமார்.வழங்கினார்.அவர்களிடம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தலைக்கவசம் கொடுத்து தலை கவசத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இருசக்கர வாகனம் ஓட்டும்போது அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இதன் மூலம் எதிர்பாராமல் ஏற்படும் விபத்துகளின்போது தலையில் அடிபடாமல் தப்பிக்க முடியும். போக்குவரத்து விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அதிவேகமாக வாகனம் ஓட்டக்கூடாது. மது அருந்தி விட்டும், செல்போன்களில் பேசி கொண்டும் செல்லக்கூடாது. ஓட்டுநர் உரிமமின்றி வாகனங்கள் இயக்கக்கூடாது.குறிப்பாக 18 வயதிற்கு குறைவாக உள்ள சிறுவர்கள் இருசக்கர வாகனம் உட்பட எந்த வாகனத்தையும் ஓட்டக்கூடாது. ஓட்டி விபத்தை ஏற்படுத்தும் பட்சத்தில் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதில் மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சரவணன் நீதிபதி வட்ட சட்டப் பணிகள் குழு, தலைவர் கே.சக்திவேல் குற்றவியல் நடுவர்,மதிவதனி.போக்குவரத்து காவல் ஆய்வாளர்,சஜினி.
வழக்கறிஞர்கள் சங்கம் செயலாளர் ஆர் ராஜேந்திரன். உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.